உள்நாட்டு செய்தி

கந்தகாடு சம்பவம் குறித்து நீதி அமைச்சர் அறிக்கை கோரினார்

  • January 15, 2024
  • 0 min read
கந்தகாடு சம்பவம் குறித்து நீதி அமைச்சர் அறிக்கை கோரினார்

கந்தகாடு புனர்வாழ்வு நிலையத்தில் அண்மையில் இடம்பெற்ற மோதல் சம்பவம் தொடர்பான அறிக்கை நாளை நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷவிடம் கையளிக்கவுள்ளதாக புனர்வாழ்வு ஆணையாளர் நாயகம் தர்ஷன ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.

கடந்த வெள்ளிக்கிழமை இரு குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட மோதலில் 29 கைதிகள் காயமடைந்ததுடன் பலர் தப்பிச் சென்றுள்ளனர்.

இதேவேளை, டிசம்பர் 11ஆம் திகதி, கந்தகாடு புனர்வாழ்வு நிலையத்தில் இரு குழுக்களுக்கிடையில் இதேபோன்ற மோதலின் போது, 140க்கும் மேற்பட்ட புனர்வாழ்வுக் கைதிகள் தப்பிச் சென்றனர்.

இந்த நிலையில் கந்தகாடு புனர்வாழ்வு நிலையத்தில் இடம்பெற்று வரும் இந்த மோதல்கள் தொடர்பில் உடனடியாக அறிக்கை சமர்ப்பிக்குமாறு நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ கோரிக்கை விடுத்துள்ளார்.

About Author

Master Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *