நாட்டில் மேலும் ஒரு கரோனா மரணம்…!
நாட்டில் மேலும் ஒரு கொரோனா மரணம் பதிவாகியுள்ளது.
அதன்படி வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நோயாளி ஒருவர் கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்துள்ளார்.
சிறுநீரக நோய் காரணமாக வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், குறித்த நபர் நேற்று உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.
உயிரிழந்தவர் அனுராதபுரத்தைச் சேர்ந்த 55 வயதுடையவர் எனவும், ஆன்டிஜென் பரிசோதனையின் போது அவருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.