கம்பஹாவில் கொரோனா தொற்று காரணமாக ஒருவர் உயிரிழந்துள்ளார்
உடல்நலக்குறைவு காரணமாக கம்பஹா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நோயாளி ஒருவர் கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்துள்ளார்.
யக்கல பிரதேசத்தில் வசிக்கும் 63 வயதுடைய பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
பிரேத பரிசோதனையின் போது, வைத்தியசாலையின் வைத்திய பரிசோதகர் அறிக்கையினால் அவர் கொவிட் 19 நோயினால் உயிரிழந்துள்ளார் என உறுதிப்படுத்தப்பட்டதாக கம்பஹா மரண பரிசோதகர் டாக்டர் பிபிஆர்பி ராஜபக்ஷ தெரிவித்தார்.
கம்பஹா மாநகர சபையின் கட்டுப்பாட்டில் உள்ள கசகவத்தை மயானத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் உயிரிழந்தவரின் சடலம் தகனம் செய்யப்பட்டதாக மாநகர சபை வட்டாரங்கள் தெரிவித்தன.
கடந்த சில நாட்களுக்கு முன்னர் கண்டி பிரதேசத்தில் கொரோனா தொற்று காரணமாக ஒருவர் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.