பட்ஜெட் அறிக்கையை நான் இன்னும் முழுமையாக படிக்கவில்லை. உடனே என்னிடம் கேட்டால் நான் எப்படி கருத்து தெரிவிப்பது? : மஹிந்த ராஜபக்ஷ!
முன்னாள் ஜனாதிபதியும் பொதுஜன பெரமுனவின் தலைவருமான மஹிந்த ராஜபக்ஷ 2024 வரவு செலவுத் திட்டம் தொடர்பில் கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டார்.
ஜனாதிபதியும் நிதியமைச்சர் ரணில் விக்ரமசிங்கவும் இன்று (13) பாராளுமன்றத்தில் சமர்ப்பித்த 2024ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் தொடர்பில் மஹிந்த ராஜபக்ஷவிடம் கருத்து கேட்ட போது, அவர் எவ்வாறு கருத்து தெரிவிப்பதென உடனடியாக மறுத்துள்ளார்.
எனினும், செய்தியாளர்கள் அவரிடம் தொடர்ந்து கேட்டபோது,
பட்ஜெட் அறிக்கையை நான் இன்னும் முழுமையாக படிக்கவில்லை. உடனே என்னிடம் கேட்டால் நான் எப்படி கருத்து தெரிவிப்பது? இதுபற்றி அறிந்தவர்களிடம் கேளுங்கள். படித்த பிறகு சொல்கிறேன்.
அரசாங்க ஊழியர்களின் வாழ்க்கைச் செலவு அதிகரிக்கப்பட்டுள்ளது. இது நல்ல விஷயம் என்றார்.