மாணவர்களுக்கான பயண சீசன் டிக்கெட்டுக்கு மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு!
பாடசாலை , உயர்கல்வி, தொழில்நுட்பம் மற்றும் தொழிற்கல்வி மாணவர்களுக்கு பயண சீசன் டிக்கெட்டுகளை வழங்குவதற்காக 2024 பட்ஜெட்டில் 10,500 மில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளது.
2024ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தை நேற்று (13.11.2023) பாராளுமன்றத்தில் முன்மொழியும் போதே அதி மேதகு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இதனைக் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
இதன் கீழ் 487,000 பாடசாலை மாணவர்கள், 7,000 உயர்கல்வி மாணவர்கள் மற்றும் 31,000 தொழில் மற்றும் தொழில்நுட்ப மாணவர்கள் நிவாரணம் பெற்று வருவதாக ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.