வடகொரியாவில் திரைப்படம் பார்த்த குழந்தைகளுக்கு என்ன நடந்தது
வடகொரியாவில் பாடல்கள் மற்றும் திரைப்படங்களைப் பார்த்ததற்காக இரண்டு சிறுவர்களுக்கு 12 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
K-pop எனப்படும் தென் கொரிய வீடியோ பாடல்கள் மற்றும் திரைப்படங்களைப் பார்த்து விநியோகித்ததாக இரண்டு 16 வயது சிறுவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டது. இதையடுத்து அவர்களுக்கு 12 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டது.
இணையத்தில் பரவும் ஒரு வீடியோவில், சுமார் 1000 மாணவர்கள் அமர்ந்திருக்கும் பொது மண்டபத்தில் அரக்கு உடையில் இரண்டு மாணவர்கள் தங்கள் கைகளில் ஒரு விலங்கைப் பூட்டிக்கொண்டு நிற்கிறார்கள். அனைவர் முன்னிலையிலும் இவர்களுக்கு இந்த தண்டனை வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது.