மின் வாரிய ஊழியர்கள் போராட்டம்
மின்சார சபையை மறுசீரமைப்பதற்கான உத்தேச சட்டமூலத்திற்கு எதிராக இன்று முதல் மூன்று நாள் போராட்டத்தை முன்னெடுக்கத் திட்டமிட்டுள்ளதாக இலங்கை மின்சார ஊழியர் சங்கம் அறிவித்துள்ளது.
இது தொடர்பான சட்டத்தை உடனடியாக மீட்டெடுக்குமாறு மின்சார அமைச்சருக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக இலங்கை மின்சார ஊழியர் சங்கத்தின் செயலாளர் ரஞ்சன் ஜயலால் தெரிவித்துள்ளார்.
இலங்கை மின்சார சபையின் தலைமை அலுவலகத்திற்கு முன்பாக மூன்று நாட்களுக்கு பாரிய போராட்டமொன்றை நடத்த ஏகமனதாக தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் ரஞ்சன் ஜயலால் தெரிவித்துள்ளார்.