விளையாட்டு

மற்றொரு நீதிபதி ராஜினாமா – புதிய நீதிபதிகள் குழு நியமனம்

  • November 16, 2023
  • 0 min read
மற்றொரு நீதிபதி ராஜினாமா – புதிய நீதிபதிகள் குழு நியமனம்

கிரிக்கெட் இடைக்கால ஐகோர்ட்டுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரிக்க புதிய நீதிபதிகள் குழு நியமிக்கப்பட்டுள்ளது.

அந்த மனு டி.என். சமரகோன் மற்றும் நீல் இத்தவெல ஆகியோர் அடங்கிய மேன்முறையீட்டு நீதிமன்ற குழாம் முன்னிலையில் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது இந்த மனுவை விசாரிப்பதில் இருந்து தாம் விலகுவதாக நீதிபதி நீல் இத்தவெல தெரிவித்தார்.

இதன்படி, இந்த மனுவை விசாரிப்பதற்காக புதிய நீதிபதிகள் குழுவொன்றை பெயரிடுமாறு மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைவர் நிஷங்க பந்துல கருணாரத்னவுக்கு மனு அனுப்பப்பட்டது.

இந்த நிலையில், மனு மீதான விசாரணை திங்கட்கிழமை (20) ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

About Author

Master Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *