உள்நாட்டு செய்தி

மகிந்த ரணிலை வெறுக்கிறார்

  • January 6, 2024
  • 1 min read
மகிந்த ரணிலை வெறுக்கிறார்

 

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அடுத்த ஜனாதிபதி வேட்பாளராக ரணில் விக்ரமசிங்கவை நியமிப்பதை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ விரும்பவில்லை என ரஷ்யாவுக்கான இலங்கையின் முன்னாள் தூதுவர் உதயங்க வீரதுங்க தெரிவித்துள்ளார்.

பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக தம்மிக்க பெரேராவும், பிரதமர் வேட்பாளராக நாமல் ராஜபக்ஷவும் நியமிக்கப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதித் தேர்தலில் நாமல் ராஜபக்ஷவை நியமிக்க இன்னும் காலதாமதமாகியுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஜனாதிபதித் தேர்தலின் பின்னர் ஜனாதிபதியின் செயலாளர் நீக்கப்பட்டு காமினி செனரத் ஜனாதிபதியின் செயலாளராக நியமிக்கப்படுவார் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர் பொதுத் தேர்தலை நடத்துவதற்கு பசில் ராஜபக்ஷ ஏற்கனவே ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் விருப்பம் தெரிவித்துள்ளதாகவும் அவர் கூறினார்.

வடக்கு மாகாண அபிவிருத்தி தொடர்பில் ஜனாதிபதியின் அறிவிப்பு இணைய ஊடகம் ஒன்றின் கலந்துரையாடலின் போதே ரஷ்யாவுக்கான இலங்கையின் முன்னாள் தூதுவர் உதயங்க வீரதுங்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.

About Author

Master Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *