அரசியல்

போர் இல்லாத காலத்திலும் வீரர்களுக்கு இவ்வளவு பெரிய தொகையா? இதனை தமிழ் தேசிய கூட்டமைப்பு அங்கீகரிக்காது

  • November 23, 2023
  • 0 min read
போர் இல்லாத காலத்திலும் வீரர்களுக்கு இவ்வளவு பெரிய தொகையா? இதனை தமிழ் தேசிய கூட்டமைப்பு அங்கீகரிக்காது

2023ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் நன்மைகளை வழங்கும் பல முன்மொழிவுகளுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தனது ஆதரவைத் தெரிவித்துள்ளது.
பாராளுமன்றத்தில் நேற்று இடம்பெற்ற வரவு செலவு திட்டம் மீதான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அரச அதிகாரிகள், வடக்கு, கிழக்கு மாகாண மக்கள் மற்றும் மீனவர்களுக்கு நன்மைகளை வழங்கும் பல முன்மொழிவுகளை கூட்டமைப்பு வரவேற்கும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

எவ்வாறாயினும், உள்நாட்டு யுத்தம் இல்லாவிட்டாலும், ஆயுதப் படைகளுக்கு இவ்வளவு பெரிய நிதி ஒதுக்கீட்டை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஏற்றுக்கொள்ளாது என்றும் சுமந்திரன் கூறினார்.

About Author

Master Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *