பொருளாதார நெருக்கடியில் நானும் போராடிக் கொண்டிருக்கிறேன்; அமைச்சர் பவித்ரா
மக்கள் கடும் பொருளாதார நெருக்கடியை எதிர்நோக்கியுள்ள இவ்வேளையில் அரசாங்கத்தின் நிதியை வெளிப்படைத்தன்மையுடன் செலவு செய்து மக்களுக்கு நிவாரணம் வழங்குவதுடன் மோசடிகள் இடம்பெறாமல் அதிகாரிகள் உறுதிப்படுத்த வேண்டும் என நீர்ப்பாசன, வனஜீவராசிகள் மற்றும் வன பாதுகாப்பு அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்துள்ளார்.
இரத்தினபுரி மாவட்ட நீர்ப்பாசனத் திட்டங்களின் முன்னேற்றம் தொடர்பாக சம்பந்தப்பட்ட அமைப்புகளின் தலைவர்கள் அழைக்கப்பட்ட இரத்தினபுரி மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற கலந்துரையாடலில் கலந்துகொண்டு அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.
பவித்ரா வன்னியாராச்சி, பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு சுதந்திரமாக எழுந்து நிற்கத் தேவையான பலத்தை வழங்குவதற்கு அர்ப்பணிப்புடன் செயற்படுமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.
மேலும் நீர்ப்பாசன திட்டங்களுக்கு பணம் செலவழிப்பதில் நிதி முறைகேடு நடைபெறாமல் இருப்பதை அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும். உங்களையும் என்னையும் போலவே, நாங்கள் அனைவரும் பொருளாதார நெருக்கடியில் கடினமான காலங்களை எதிர்கொள்கிறோம்.
இந்த பணத்தை வெளிப்படைத்தன்மையுடன் பயன்படுத்தி பொருளாதார நெருக்கடியில் உள்ள மக்களுக்கு நிவாரணம் வழங்குவது அதிகாரிகளின் பொறுப்பு என அவர் மேலும் தெரிவித்தார்.