பல வருட கடின உழைப்புக்கு பலன் கிடைத்தது: மிகவும் புகழ்பெற்ற சரிட்டா ஜூவல்லரியின் உரிமையாளர்
இலங்கையின் முன்னணி ஆபரண உற்பத்தியாளர்களில் ஒன்றான Sarrita Jewellery, ரத்தினங்கள் மற்றும் ஆபரணத் துறையில் ‘உலகளாவிய சின்னமாக’ இந்தியாவால் (GJEPC) பாராட்டப்பட்டதாக, மேற்படி நகைக்கடையின் உரிமையாளர் ஆர்.பாலசுப்ரமணியம் தெரிவித்தார்.
இரத்தினக்கற்கள் மற்றும் ஆபரண ஏற்றுமதி ஊக்குவிப்பு கவுன்சில் அண்மையில் தங்களுடைய நகைகளை இவ்விடயத்தில் வழங்கியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஐக்கிய அரபு எமிரேட்ஸ் துபாயில் உள்ள இன்டர்காண்டினென்டல் ஹோட்டலில் நடைபெற்ற சர்வதேச ரத்தினம் மற்றும் நகை கண்காட்சியின் மூன்றாவது பதிப்பில் இந்த விருது அறிவிக்கப்பட்டது.
இதில் 50க்கும் மேற்பட்ட இந்திய இரத்தினங்கள் மற்றும் நகைகள் தொடர்பான தொழிலதிபர்கள் மற்றும் 300 சர்வதேச வர்த்தகர்கலும் கலந்து கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.