வணிகம்

தேங்காய் உற்பத்தியை 1000 மில்லியனாக அதிகரிக்க திட்டம்

  • December 31, 2023
  • 0 min read
தேங்காய் உற்பத்தியை 1000 மில்லியனாக அதிகரிக்க திட்டம்

அடுத்த மூன்று வருடங்களுக்குள் உள்நாட்டு தேங்காய் உற்பத்தியை 1000 மில்லியனாக அதிகரிப்பதற்கான திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக விவசாய மற்றும் தோட்டக்கலை அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.

தற்போது வருடாந்த தேங்காய் உற்பத்தி 3600 மில்லியன் தேங்காய் எனவும், வருடாந்த நுகர்வுக்கு 1800 மில்லியன் தேங்காய் பயன்படுத்தப்படுவதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

இத்தொழிலுக்கு கூடுதலாக 600 மில்லியன் காய்கள் தேவை என்று கூறிய அமைச்சர், இந்த இடைவெளியை ஈடுகட்ட ஒரு மரத்தில் இருந்து கிடைக்கும் அளவை குறைந்தது இரண்டு தேங்காய்களாவது அதிகரிக்க வேண்டும் என்றார்.

வெட்டுக்கிளிகள் மற்றும் குரங்குகளால் வருடாந்தம் அழிக்கப்படும் தேங்காய்களின் அளவு 250 மில்லியனைத் தாண்டியுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

சூர்யவெவ விகாரகல கிராமத்தில் நூறு விவசாய குடும்பங்களுக்கு இலவச தென்னந்தோப்புகளை வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டு அமைச்சர் இதனை தெரிவித்தார்.

அம்பாந்தோட்டை மாவட்டத்தில் தென்னை செய்கை வேலைத்திட்டத்தின் கீழ் 50,000 தென்னை மரங்கள் இலவசமாக விநியோகிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

About Author

Master Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *