திருநங்கைகளுக்கு கிரிக்கெட் விளையாட தடை
ஆணாக பிறந்த திருநங்கைகள் சர்வதேச பெண்கள் கிரிக்கெட்டில் விளையாட ஐசிசி தடை விதித்துள்ளது.
பெண் வீரர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக ஒன்பது மாத ஆலோசனை செயல்முறைக்குப் பிறகு இந்த முடிவு எடுக்கப்பட்டதாக ஐசிசி ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இந்த ஆண்டின் தொடக்கத்தில் பெண்கள் சர்வதேச அணியில் இடம்பிடித்த முதல் திருநங்கை கிரிக்கெட் வீராங்கனை என்ற பெருமையை கனடாவின் டேனியல் மெக்கஹே பெற்றார்.
29 வயதான அவர் செப்டம்பரில் பிரேசிலுக்கு எதிராக டி20 சர்வதேச அரங்கில் அறிமுகமானார். இருப்பினும், ஐசிசியின் புதிய விதிமுறைகளின்படி, அவர் இனி மகளிர் சர்வதேச கிரிக்கெட்டில் பங்கேற்க முடியாது.