திங்கட்கிழமை பிரமோத்யா விக்கிரமசிங்கவுக்கு அழைப்பு
தேசிய கிரிக்கெட் தெரிவுக்குழுவின் தலைவர் பிரமோத்ய விக்ரமசிங்கவிற்கு எதிராக 5 மணிநேர வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், பிரமோத்ய விக்கிரமசிங்க எதிர்வரும் திங்கட்கிழமை மீண்டும் அழைக்கப்படுவார் எனவும் விளையாட்டு குற்றத்தடுப்பு பிரிவின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் இன்று (21) தெரிவித்தார்.
அந்த 5 மணி நேரத்தில் பிரமோத்ய விக்ரமசிங்கவின் வாக்குமூலத்தில் நான்கில் ஒரு பங்கை தான் பதிவு செய்ததாக தெரிவித்த அதிகாரி, பிரமோத்ய விக்ரமசிங்க சோர்வாக இருந்ததால் மாலை 4.15 மணிக்கு வாக்குமூல பதிவு நிறுத்தப்பட்டதாகவும் குறிப்பிட்டார்.
பிரமோத்ய விக்கிரமசிங்க இன்று முற்பகல் 11.15 மணியளவில் கொழும்பு சுகததாச விளையாட்டு வளாகத்திற்கு வெளியே உள்ள விளையாட்டு குற்றத்தடுப்பு பொலிஸ் பிரிவிற்கு விஜயம் செய்தார்.
விளையாட்டு குற்றத்தடுப்புப் பிரிவின் பணிப்பாளர் பிரதிப் பொலிஸ் மா அதிபர் ஜயநாத் வனசிங்கவின் மேற்பார்வையில் பிரிவின் நிலைய கட்டளைத் தளபதி பிரதான பொலிஸ் பரிசோதகர் சுபுல் விதானகே தலைமையில் இந்த வாக்குமூலம் எடுக்கப்பட்டது.