தபால் நிலையங்களில் வாகன அபராதம் செலுத்தும் வசதி
நாடு முழுவதிலும் உள்ள ஒவ்வொரு மாவட்டத்திலும் தெரிவு செய்யப்பட்ட தபால் நிலையங்களில் வாகன அபராதத்தை செலுத்துவதற்கு வசதி செய்ய தபால் திணைக்களம் தீர்மானித்துள்ளது.
மேல் மாகாணத்தில் இரவில் இயங்கும் தபால் நிலையங்களில் தண்டப்பணம் செலுத்தும் வசதி வெற்றி பெற்றதன் அடிப்படையில் ஏனைய மாகாணங்களிலும் இரவில் இயங்கும் தபால் நிலையங்களிலும் தண்டப்பணம் செலுத்தும் வசதி ஏற்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கான வசதிகளை ஜனவரி மாத இறுதிக்குள் செய்து தர நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.