அரசியல்

டயானா மீது தாக்குதல்; இன்று இறுதி முடிவு!

  • November 23, 2023
  • 0 min read
டயானா மீது தாக்குதல்; இன்று இறுதி முடிவு!

நாடாளுமன்ற வளாகத்தில் அண்மையில் இடம்பெற்ற மோதல் சம்பவம் தொடர்பில் இன்று (09) இறுதித் தீர்மானம் எடுக்கப்படவுள்ளது. சம்பவம் தொடர்பில் விசாரணை நடத்த நியமிக்கப்பட்ட குழுவின் தலைவர் பிரதி சபாநாயகர் இதனை தெரிவித்துள்ளார்.

இராஜாங்க அமைச்சர் டயானா கமகே, ஐக்கிய மக்கள் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களான சுஜித் சஞ்சய் பெரேரா மற்றும் ரோஹன பண்டார ஆகியோருக்கு இடையில் பாராளுமன்ற வளாகத்தில் அண்மையில் ஏற்பட்ட மோதல் சம்பவம் தொடர்பில் விசாரணை நடத்துவதற்கு சபாநாயகர் மஹிந்த யப்பா அபேவர்தன பிரதி சபாநாயகர் அஜித் ராஜபக்ஷ தலைமையில் குழுவொன்றை நியமித்துள்ளார்.

மேற்படி குழு கடந்த திங்கட்கிழமை இரண்டாவது நாளாகவும் கூடியதுடன், மேற்படி மூன்று நாடாளுமன்ற உறுப்பினர்களும் நாடாளுமன்றத்தின் கௌரவத்தை பாதிக்கும் வகையில் செயற்பட்டுள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

About Author

Master Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *