சுற்றி வளைப்பின் மூலம் 22 கோடி அபராதம்
நாடு தழுவிய சுற்றிவளைப்பின் ஊடாக இவ்வருடம் 22 கோடி ரூபா தண்டப்பணமாக அறவிடப்பட்டுள்ளதாக நுகர்வோர் அதிகார சபை அறிவித்துள்ளது.
அதிக விலைக்கு பொருட்களை விற்பனை செய்தல், இருப்புக்களை மறைத்து வைத்தல், காலாவதியான பொருட்களை விற்பனை செய்தல் மற்றும் விலைகளை காட்சிப்படுத்தாமை போன்ற சட்டவிரோத செயற்பாடுகளுக்காகவே இந்த அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது.
நாடு முழுவதும் சுமார் 22,000 சோதனைகள் நடத்தப்பட்டு 19,000 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகாரசபை தெரிவித்துள்ளது.
இதேவேளை, எதிர்காலத்தில் நாடு முழுவதும் சுற்றிவளைப்பு நடவடிக்கைகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படும் என நுகர்வோர் விவகார அதிகார சபை மேலும் தெரிவித்துள்ளது.