சதோசவ நிறுவனத்துக்கு மேலும் 80 லட்சம் முட்டைகள் விநியோகம்
இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட மேலும் 80 இலட்சம் முட்டைகள் லங்கா சதொச நிறுவனத்திற்கு விநியோகிக்கப்பட்டுள்ளதாக இலங்கை அரச (பொது) வர்த்தகக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் ஆசிரி வலிசுந்தர தெரிவித்தார்.
லங்கா சதொச நிறுவனத்திற்கு நாளாந்தம் விநியோகிக்கப்படும் 10 இலட்சம் முட்டைகள் வரையான முட்டைகள் எதிர்வரும் 31 ஆம் திகதிக்குள் 20 இலட்சமாக அதிகரிக்கப்படும் எனவும் இதன் மூலம் மக்கள் தமது தேவைகளுக்கு முட்டைகளை பெற்றுக்கொள்ள முடியும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, எதிர்வரும் ஜனவரி மாதத்திற்கு தேவையான அளவு முட்டைகளை இறக்குமதி செய்யுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும், எதிர்வரும் ஜனவரி மாதம் மேலும் 300 இலட்சம் முட்டைகள் இறக்குமதி செய்யப்படும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதன்படி, இறக்குமதி செய்யப்பட்ட முட்டைகளை கொள்வனவு செய்வதற்கு மக்கள் ஆர்வம் காட்டுவதாக லங்கா சதொச அறிவித்துள்ளது.