சட்டவிரோத பட்டாசு ஆலையில் வெடிப்பு – மூவர் காயம்
வீடொன்றில் இயங்கி வரும் சட்டவிரோத பட்டாசு தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் பட்டாசு உரிமையாளர் மற்றும் அவரது இரண்டு பிள்ளைகள் காயமடைந்துள்ளதாக பிலியந்தலை பொலிஸார் தெரிவித்தனர்.
பிலியந்தலை, மாவிட்டபுரத்தில் இன்று (31) காலை இடம்பெற்ற இச்சம்பவத்தில் வீட்டில் இருந்த மோட்டார் சைக்கிள் உட்பட பட்டாசு தயாரிக்கப் பயன்படுத்தப்பட்ட அனைத்து தளபாடங்கள் மற்றும் பொருட்கள் எரிந்து நாசமாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த வீட்டில் பட்டாசுகள் மற்றும் பட்டாசுகளுக்கு தேவையான பொருட்கள் தயாரிக்கப்படுகின்றன.
இன்று (31) காலை 7 மணியளவில் பட்டாசுகளை சந்தைக்கு கொண்டு செல்வதற்காக நடவடிக்கை எடுத்துக்கொண்டிருந்த போது இந்த வெடிப்பு சம்பவம் இடம்பெற்றுள்ளது.
காயமடைந்தவர்கள் களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.