கொழும்பில் பாரிய ஆர்ப்பாட்டம்: தண்ணீர் தாங்கிகள் தயார் நிலையில்
கொழும்பில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ள தொலைத்தொடர்பு ஊழியர்கள் பேரணி ஒன்றை ஆரம்பித்துள்ளனர்.
எனினும், பொலிஸாரின் இடைமறிப்பு காரணமாக, அவர்கள் டெலிகாம் அலுவலகத்தை சுற்றி ஊர்வலமாகச் சென்று தமது ஆர்ப்பாட்டத்தைத் தொடர்கின்றனர்.
எவ்வாறாயினும், ஜனாதிபதி அலுவலகம் நோக்கிச் செல்லக்கூடிய வீதிகளில் பெருமளவான பொலிஸார் பாதுகாப்புக் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
மேலும், தண்ணீர் செல்லும் வாகனங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.