Breaking News

கொரோனா தொற்று காரணமாக மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளார்

  • December 29, 2023
  • 0 min read
கொரோனா தொற்று காரணமாக மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளார்

அநுராதபுரம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த பெண் ஒருவர் கொவிட் 19 வைரஸால் பாதிக்கப்பட்டு இன்று (29) உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மதவாச்சியைச் சேர்ந்த 54 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தாயே உயிரிழந்துள்ளார்.

மூச்சுத்திணறல் காரணமாக மதவாச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட அவர் மேலதிக சிகிச்சைக்காக அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

மருத்துவ பரிசோதனையில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக மருத்துவமனையின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

About Author

Master Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *