கிரிக்கெட் வழக்கு – நாளை பரிசீலனைக்கு
இலங்கை கிரிக்கெட் சங்கத்தின் தலைவர் ஷம்மி சில்வா தாக்கல் செய்த மனு இன்று (22) இரண்டாவது நாளாக மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இதன்படி, குறித்த மனு நாளை (23) பரிசீலிக்கப்படும் என மேன்முறையீட்டு நீதிமன்றம் அறிவித்துள்ளது.
இலங்கை கிரிக்கெட் சங்கத்தின் செயற்பாடுகளுக்கு இடைக்கால கட்டுப்பாட்டு குழுவொன்றை நியமிக்க விளையாட்டுத்துறை அமைச்சர் எடுத்த தீர்மானத்தை சவாலுக்கு உட்படுத்தி இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.