கித்துல் தேன் தொடர்பான பொருட்களின் தரத்தை பாதுகாக்க புதிய சட்டங்கள்
கித்துல் தேன் உற்பத்திகளின் தரத்தைப் பாதுகாக்க புதிய சட்டங்கள் மற்றும் ஒழுங்குமுறைகளை அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர கித்துள் அபிவிருத்திச் சபைக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
தற்போது நாட்டில் விற்பனை செய்யப்படும் கித்துல் தேன் மற்றும் அதனுடன் தொடர்புடைய பொருட்களின் தரம் தொடர்பில் பிரச்சினைக்குரிய சூழ்நிலைகள் உருவாகியுள்ளன. குறிப்பிட்ட சில பொருட்களில் சீனி சேர்க்கப்படுவதால் உற்பத்தியாளர்கள் கித்துள் தேன் தொடர்பான பொருட்களை விற்பனை செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
சர்வதேச சந்தையில் கித்துல் தொடர்பான பொருட்களுக்கு அதிக கிராக்கி காணப்படுவதால் கித்துல் தேனின் தரத்தை உறுதிப்படுத்த வேண்டும் என விவசாய தோட்டக்கலை அமைச்சர் மஹிந்த அமரவீர கித்துள் அபிவிருத்தி சபைக்கு ஆலோசனை வழங்கினார்.