கடத்தப்பட்ட டெண்டு இலைகள் மீட்பு
இலங்கை கடற்படையினரால் சுமார் 477 கிலோகிராம் (ஈரமான எடை) டெண்டு இலைகள் கல்பிட்டி ஐப்பந்தீவு தீவுக்கு அருகில் உள்ள கடல் பகுதியில் மீட்கப்பட்டுள்ளன.
நாட்டிற்குள் அனுமதிக்கப்படாத பொருட்களை கடத்துவதைத் தடுப்பதற்காக, இலங்கை கடற்படையானது, தீவின் கரையோரப் பகுதிகளில் தொடர்ந்து தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்த முயற்சிகளின் விரிவாக்கமாக வடமேற்கு கடற்படை கட்டளையில் உள்ள SLNS விஜயா கடந்த நவம்பர் 22 ஆம் திகதி இப்பந்திதீவுக்கு அண்மித்த பகுதியில் இந்த விசேட நடவடிக்கையை மேற்கொண்டது. இந்த நடவடிக்கையின் மூலம் கடலில் மிதந்த சந்தேகத்திற்கிடமான 14 சாக்கு மூட்டைகள் மீட்கப்பட்டன. மேலதிக சோதனைகளை மேற்கொண்ட கடற்படையினர், ஈரமான எடையுடன் கூடிய சுமார் 477 கிலோகிராம் டெண்டு இலைகளை கைப்பற்றியுள்ளனர்.
குறித்த பகுதியில் கடற்படையினர் இருப்பதால் அவற்றைக் கரைக்குக் கொண்டுவர முடியாமல் கடத்தல்காரர்கள் கைவிட்டுச் சென்றிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. மீட்கப்பட்ட டெண்டு இலைகள், சட்ட நடவடிக்கைக்காக ஆஜர்படுத்தப்படும் வரை கடற்படையின் காவலில் வைக்கப்பட்டுள்ளன.