உள்நாட்டு செய்தி

எரிவாயு, பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம்!

  • December 28, 2023
  • 1 min read
எரிவாயு, பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம்!

எரிவாயு, பெற்றோல் மற்றும் டீசல் விலைகளில் ஏற்பட்டுள்ள மாற்றம் குறித்து ஜனாதிபதி ஊடக மையத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் விளக்கமளிக்கப்பட்டது.

எரிபொருள் மற்றும் எரிவாயு மீதான VAT அமுல்படுத்தப்படுவதற்கு முன்னர் துறைமுகம் மற்றும் விமான நிலைய வரி நீக்கப்படும் என நிதி அமைச்சின் வரி கொள்கை ஆலோசகர் திருமதி தனுஜா பெரேரா தெரிவித்தார்.

இதன்படி, எரிபொருளுக்கான 18 சதவீத வற் வரி அமுல்படுத்தப்படும் போது 7.5 சதவீதமான துறைமுகம் மற்றும் விமான நிலைய வரி நீக்கப்படும் என்றும் திருமதி தனுஜா பெரேரா தெரிவித்தார்.

மேலும், எரிவாயு மீதான 18 சதவீத வற் வரி அமுல்படுத்தப்படும் அதேவேளை, துறைமுகம் மற்றும் விமான நிலைய வரி 2.5 சதவீதமும் நீக்கப்படும் என திருமதி தனுஜா பெரேரா தெரிவித்தார்.

About Author

Master Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *