எரிபொருள் விலையில் வியத்தகு மாற்றம்
இலங்கை கனிய வள கூட்டுத்தாபனத்தின் எரிபொருட்களின் சில்லறை விலையில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது.
இன்று அதிகாலை 5 மணி முதல் அமுலுக்கு வரும் வகையில் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன்படி, ஒக்டேன் 92 ரக பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலை 20 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 366 ரூபாவாகும்.
ஒக்டேன் 95 ரக பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலை 38 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன் அதன் புதிய விலை 464 ரூபாவாகும். இதேவேளை, ஒட்டோ டீசல் ஒரு லீற்றரின் விலை 29 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 358 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் சுப்பர் டீசல் லீற்றர் ஒன்றின் விலை 41 ரூபாவால் அதிகரிக்கப்பட்டு அதன் புதிய விலை 475 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் மண்ணெண்ணெய் லீற்றர் ஒன்றின் விலை 11 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன் அதன் புதிய விலை 236 ரூபாவாகும் என இலங்கை கனிய வள கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.