உலக செய்தி

உலகில் படித்தவர்களை கொண்ட நாடு முதல் பத்து நாடுகள் எவை தெரியுமா?

  • March 20, 2024
  • 1 min read
உலகில் படித்தவர்களை கொண்ட நாடு முதல் பத்து நாடுகள் எவை தெரியுமா?

இந்த கால கட்டத்தில் கல்வி நிலையின் அடிப்படையில் பல நாடுகள் முன்னிலை வகிக்கின்றன.எனினும் நம்மில் சிலருக்கு இப்போது வரைக்கும் உலகில் படித்தவர்களை கொண்ட நாடு எது என்று கேள்வி கேட்கும் போது அதிகமானோர் அமெரிக்கா மற்றும் இந்தியா என பதிலளிப்பார்கள் ஆனால் தவறான பதிலாகும்.

இந்த பதிவில் உலகில் மிகவும் படித்தவர்களினை கொண்ட நாடு எது என்பதை தான் தெரிந்தது கொள்ள போகிறோம்.
பொருளாதார ஒத்துழைப்பு மேம்பாட்டிற்கான அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கைகளின் படி உலகின் அதிகம் படித்தவர்களை கொண்ட நாடுகளின் பட்டியலின் படி முதலிடத்தை பெற்று கொண்டது கனடா.
இங்கு 59.96% சதவீதமான சனத் தொகையினர் படித்து பட்டம் பெற்றுள்ளனர். மேலும் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது ஜப்பான். இது 52.68% சதவீதமான சனத் தொகையினர் கல்வி அறிவில் சிறந்து விளங்குகின்றனர்.

மூன்றாவது இடத்தை பிடித்துள்ள நாடுகளின் பட்டியலில் லக்சம்பர்க் என்ற நாடு காணப்படுகிறது. தென் கொரியா நான்காவது இடத்தில் உள்ளது. மேலும் இஸ்ரேல் ஐந்தாவது இடத்தை தட்டியுள்ளது.

அமெரிக்கா ஆறாவது இடத்தினைக் கொண்டதுடன் பிரிட்டன் படித்தவர்களை கொண்ட நாட்டின் வரிசையில் ஏழாவது இடத்தையும் பிடித்துள்ளது. இந்த நவீன உலகின் கல்வி அறிவு மிகுந்த நாடுகளின் பட்டியலில் முதல் பத்து இடங்களில் எந்த இடத்தினையும் இந்தியா பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.உலகில் படித்தவர்களை கொண்ட நாடு முதல் பத்து நாடுகள் எவை தெரியுமா?

 

About Author

Master Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *