இஸ்ரேல்-ஹமாஸ் போர்: 24 மணி நேரத்தில் 200க்கும் மேற்பட்டோர் பலி
இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையிலான போரில் காஸாவும் பாலஸ்தீன மக்களும் மிகப்பெரிய இழப்பை சந்தித்து வருகின்றனர்.
Deir el-Balah பகுதியில் உள்ள ஒரு வீட்டின் மீது இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில் 15 பேர் கொல்லப்பட்டனர்.
மேற்குக் கரையில் இஸ்ரேல் மேற்கொண்டு வரும் தாக்குதல்களில் மேலும் 5 பேர் பலியாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இஸ்ரேல் சிறையில் மேலும் ஒரு பாலஸ்தீன கைதி உயிரிழந்துள்ளார். இது திட்டமிட்ட கொலை என பாலஸ்தீன அமைப்புகள் குற்றம்சாட்டியுள்ளன. போர் தொடங்கியதில் இருந்து இதுவரை 7 கைதிகள் இஸ்ரேல் சிறைகளில் உயிரிழந்துள்ளனர்.
கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் இஸ்ரேல் 207 பேரைக் கொன்றதாகவும், 338 பேர் காயமடைந்ததாகவும் காசா சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இஸ்ரேல் இதுவரை 21,978 பாலஸ்தீனியர்களைக் கொன்றுள்ளதாக காஸாவின் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
மேலும், பாலஸ்தீன கல்வி அமைச்சகம் இஸ்ரேலிய தாக்குதல்களால் 4,156 மாணவர்கள் கொல்லப்பட்டதாகவும், 381 பள்ளிகள் இஸ்ரேலால் அழிக்கப்பட்டதாகவும் தெரிவித்துள்ளது.