இஸ்ரேல் மீது ஏவுகணை தாக்குதல்
ஹமாஸின் இரண்டாவது மூத்த தலைவரான ஷேக் சலே அல்-அரூரி கொல்லப்பட்டதற்கு பதிலடியாக ஹிஸ்புல்லா இன்று (06) காலை இஸ்ரேல் மீது 60 ஏவுகணைகளை ஏவியது.
“பெரிய தலைவரான ஷேக் சலே அல் அரூரியின் கொலைக்கு நாங்கள் பதிலடி கொடுப்போம். நாங்கள் 62 வகையான ராக்கெட்டுகளை இஸ்ரேலின் மெரோன் விமான தளத்தை குறிவைத்து முதன்மை தாக்குதலாக ஏவினோம்” என்று ஹமாஸின் ஆதரவு அமைப்பான ஹிஸ்புல்லா கூறினார்.
விரைவில் பதிலடி கொடுக்கப்படும்’ என ஹிஸ்புல்லாஹ் தலைவர் ஹசன் நஸ்ரல்லாஹ் இஸ்ரேலுக்கு நேற்று (05) எச்சரிக்கை விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.