உள்நாட்டு செய்தி

இலங்கை மின்சார சபையின் விசேட அறிவிப்பு!

  • November 16, 2023
  • 1 min read
இலங்கை மின்சார சபையின் விசேட அறிவிப்பு!

தற்போது பயன்பாட்டிலுள்ள மின்சார பட்டியலுக்கு பதிலாக இலத்திரனியல் மின்சார பட்டியலை இலங்கை மின்சார சபை அறிமுகப்படுத்தியுள்ள நிலையில், இலத்திரனியல் மின்சார பட்டியலை பெற்றுக்கொள்ள பதிவு செய்துகொள்ளுமாறு வாடிக்கையாளர்களுக்கு இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது. ebil.ceb.lk என்ற இணையத்தளத்திற்குள் பிரவேசித்து இலத்திரனியல் மின்சார பட்டியலை பெற்றுக்கொள்வதற்காக பதிவு செய்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்

அல்லது REG <இடைவெளி> மின்சார கணக்கு இலக்கத்தை டைப் செய்து 1987 என்ற இலக்கத்திற்கு குறுந்தகவல் (SMS) அனுப்புவதன் ஊடாக இலத்திரனியல் மின்சார கட்டண பட்டியலை பெற்றுக்கொள்ளுமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்இந்த சேவை தெஹிவளை, களனி, ஸ்ரீஜயவர்தனபுர, மாத்தறை மற்றும் அம்பலங்கொட ஆகிய பகுதிகளுக்கு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதுடன், விரைவில் நாடுமுழுவதும் இந்த சேவை அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது. இந்த சேவை குறித்த மேலதிக தகவல்களை அறிந்துகொள்ள 0714247777 என்ற இலக்கத்துடன் தொடர்புகொள்ளுமாறு இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது

About Author

Master Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *