இலங்கை கல்வி முறையில் மாற்றம்! 17ல் உயர்நிலைத் தேர்வு: கல்வி அமைச்சர் அறிவிப்பு
கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையை 10ஆம் தரத்தில் நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த தெரிவித்துள்ளார்.
17 வயதில் அட்வான்ஸ்டு தேர்வு
பாராளுமன்றத்தின் இன்றைய அமர்வில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைக்கு 17 வயதில் தோற்ற முடியும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
4 வயதை பூர்த்தி செய்யும் குழந்தை கண்டிப்பாக முன்பள்ளி கல்வியை பெற வேண்டும் எனவும் கல்வி அமைச்சர் சுட்டிக்காட்டினார்.