வானிலை அறிக்கை

இன்றைய வானிலை முன்னறிவிப்பு

  • January 3, 2024
  • 1 min read
இன்றைய வானிலை முன்னறிவிப்பு

நாட்டின் கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் தற்போது பெய்து வரும் மழை நிலைமை அடுத்த 2 நாட்களில் குறையும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் மாத்தளை மாவட்டத்திலும் சிறிதளவு மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

மேல், சப்ரகமுவ, தெற்கு மற்றும் ஊவா மாகாணங்கள் மற்றும் நுவரெலியா மாவட்டத்தில் பல இடங்களில் பி.பி. 2 மணிக்குப் பிறகு மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளது.

காலி, மாத்தறை மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களில் சில இடங்களில் 50 மில்லிமீற்றருக்கும் அதிகமான மிதமான மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

மேல், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களின் சில பகுதிகளில் காலை வேளையில் பனிமூட்டமான நிலை காணப்படும்.

இடியுடன் கூடிய மழை பெய்யும் நேரங்களில் இந்த பகுதிகளில் தற்காலிகமாக பலத்த காற்று வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகிறார்கள்.

முக்கிய நகரங்களுக்கான வானிலை

அனுராதபுரம் – பெரும்பாலும் சீரான வானிலை
மட்டக்களப்பு – லேசான மழை
கொழும்பு – பி.பி. 2 மணிக்கு பிறகு மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு
காலி – பி.பி. 2 மணிக்கு பிறகு மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு
யாழ்ப்பாணம் – பெரும்பாலும் சீரான வானிலை
கண்டி – பெரும்பாலும் சீரான வானிலை
நுவரெலியா – பி.பி. 2 மணிக்கு பிறகு மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு
இரத்தினபுரி – பி.பி. 2 மணிக்கு பிறகு மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு
திருகோணமலை – பெரும்பாலும் சீரான காலநிலை
மன்னார் – பெரும்பாலும் சீரான வானிலை

About Author

Master Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *