இந்திய இழுவை படகுகளை தடை செய்யக்கோரி முல்லைத்தீவில் போராட்டம்
முல்லைத்தீவு மாவட்ட கடல்சார் தொழில் அமைப்புக்கள் மற்றும் யாழ்ப்பாண கிராமிய கடல்சார் தொழில் அமைப்புக்கள் இணைந்து இந்திய இழுவை படகுகளுக்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
முல்லைத்தீவு மாவட்ட அலுவலகத்திற்கு முன்பாக இன்று (24.11.2023) குறித்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இதன் போது இந்திய இழுவை படகுகள் சட்டவிரோதமாக எல்லை தாண்டி மீன்பிடிப்பதை தடுத்து நிறுத்துமாறு கோரி மாவட்ட செயலாளரிடம் கோரிக்கை மனு ஒன்றை கையளித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.