அதிக எடை கொண்டவர்களின் எண்ணிக்கையானது இலங்கையில் அதிகரிப்பு
உலகின் முதியோர் சனத்தொகையில் 1.9 பில்லியனுக்கும் அதிகமானோர் அதிக அதிக எடை எடை கொண்டவர்கள், அவர்களில் சராசரியாக 650 மில்லியன் பேர் உடல் பருமனால் பெரும் அவதிப்படுவதாக தேசிய நீரிழிவு மையத்தின் பிரதிப் பணிப்பாளரும் , சமூக மருத்துவ நிபுணருமான திருமதி சாந்தி குணவர்தன தெரிவித்த்துள்ளார்.
உலக உடல் பருமன் தினமானது மார்ச் 04 அன்று உலகலாவிய ரீதியில் கொண்டாடப்படுகிறது.
அது தொடர்பில் சமூக வைத்திய நிபுணர் திருமதி சாந்தி குணவர்தன இவ்வாறு தெரிவித்துளார்.
“.. இதன் முக்கியத்துவம் யாதெனின், அனைவருக்கும் தெரியும், கொழுப்பு என்ற சொல் உடல் பருமனை விட சிறந்தது. உடல் பருமன் பாரிய பிரச்சினையாக மாறி வருகிறது.
இந்த நோய்களின் எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளது. உலகில் 1.9 பில்லியன் அதிக எடை கொண்டவர்கள் இதில் 650 மில்லியன் மக்கள் உடல் பருமனால் பாதிக்கப்பட்டுள்ளனர். உலக மக்கள்தொகையில் 39.% அதிக எடை கொண்டவர்களாகவும், அதில் 13% பருமனாக உள்ளனர்.
இந்நிலை இலங்கையிலும் காணப்படுவதாக திருமதி கலாநிதி சாந்தி குணவர்தன தெரிவித்த்துள்ளார்.
“இலங்கையில், சுகாதார அமைச்சு மற்றும் உலக சுகாதார ஸ்தாபனத்துடன் இணைந்து, வருடா வருடம் தொற்று அல்லாத நோய்களுக்குக் காரணமான ஆபத்துக் குழுக்கள் கண்டறியும் சோதனையை நடத்தி வருகின்றது.
அங்கு, எடை மற்றும் பருமனான நபர்களைப் பார்க்கும்போது, 2015 உடன் ஒப்பிடும்போது வேகமாக அதிகரித்துள்ளது. 2015 இல், 18-69 வயதுக்குட்பட்ட ஆண்களிளில் 24% அதிக எடை மற்றும் பருமனாக உள்ளனர்.
இது 2021ல் 30% ஆக அதிகரித்துள்ளது. அதே நேரத்தில், 2015 இல் 34% பெண்களின் எண்ணிக்கை 2021 இல் 46.7% ஆக அதிகரித்துள்ளது.